top of page
​சிலம்பம் ஓர்
தியானம்
DSC_0425_1.jpg

இன்று ஒரு சிலரால் உன்னத கலை என அழைக்கப்படும் ""யோகா" சிலம்பத்தில் ஓர் வகையாகும். சிலம்பம் ஆரம்பிக்கும் முன் குரு வணக்கம் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பிப்பர். இறைவணக்கம் செய்யும்போது கண்களை மூடி தியானம் செய்ய கூறுவார்கள். சிலம்பம் கற்பவர்களுக்கு  மனதை ஒருநிலைபடுத்திட ஆசான்கள் தியான பயிற்சியையும் அளிப்பர் சிலம்பத்தில் கற்பிக்கப்படும் நிலைகள் யாவும் தியான வகையையே சார்ந்ததாகும். சிலம்பம் ஆரம்பம் மற்றும் முடிவிலும் தியானம் செய்வது நடைமுறை.

 

அதனால் சிலம்பம்

ஓர் தியானம்.

​சிலம்பம் ஓர்
உடற்பயிற்சி
DSC_0427_1.jpg

"சுவர்  இருந்தால் மட்டுமே சித்திரம் வரையமுடியும்"

 

என்ற  நம் பழமொழிக்கேற்ப 

நமது உடலை பாதுகாக்க  உடற்பயிற்சி அவசியம். உடலுக்கு தேவையான அனைத்து வகை உடற்பயிற்சியையும் தருவது சிலம்பம் என்றால் மிகையாகாது. கையும் காலும் மெய்யும் இணைந்ததே சிலம்பம் உடம்பில் உள்ள அத்துனை நாடி நரம்புகளும் சிலம்பம் சுழற்றுதலால் வலிமை பெறுகிறது. சிலம்பத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை உடல் இயக்கம் பெறுவதால் அது ஓர் உடற்பயிற்சியாக அமைகிறது.

 

அதனால் சிலம்பம்  ஓர் உடற்பயிற்சி.

​சிலம்பம் ஓர்
தற்காப்புக்கலை
DSC_0434_1.jpg

சிலம்பம் உலகில் உள்ள அனைத்து தற்காப்பு கலைகளுக்கும்  மூத்தகலையாகவும்  தாய் கலையாகவும்  உள்ளது என்பதே தமிழனின் பெருமையாகும். சிலம்பத்தில் கை விளையாட்டு, குத்துவரிசை ,அங்கச் சுவடு, தரைப்பாடம் என்ற அடிப்படை விளையாட்டில் இருந்துதான் இன்றைய உலகில் உள்ள அனைத்து தற்காப்பு கலைகளும் தோன்றின.

 சிலம்பம் கற்றவர் தன் கையில் உள்ள  எந்த ஒரு சிறு பொருளாலும் தன்னை தற்காத்து கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையையும் மன தைரியத்தையும்  கற்றுக்கொடுக்கும்,

 

இது போன்ற சிறப்புகள் பெற்றதால் சிலம்பம்  ஓர் தற்காப்பு கலையாகும்.

Address

552, Village High Road, Sholinganallur

Chennai - 600 119.

 

Phone

+91 8122 58 80 17

+91 9789 28 63 87

Email

lingamsilambamschool@gmail.com

  • Facebook - Black Circle
  • YouTube - Black Circle
  • Instagram - Black Circle
  • Twitter - Black Circle
Find us

© 2023 LINGAM SILAMBAM TRAINING SCHOOL.

bottom of page